Skip to main content

திருமணம் குறித்த வதந்திகளுக்கு நடிகர் சிம்பு முற்றுப்புள்ளி!

actor simbu

நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என வெளிவந்த தகவல்களை அவர் மறுத்துள்ளார்

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திருமணங்களில் ஒன்று நடிகர் சிம்புவின் திருமணம். ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து, அந்த காதல்கள் தோல்வியில் முடிந்தது ஊர் அறிந்த விஷயம் தான்.

சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது? எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது.

சிம்புவின் தம்பி திருமணம்
சிம்புவின் தம்பி திருமணம்

ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், "அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்", என கூறியிருந்தார். இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது.

சிம்பு தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார். இதற்காக லண்டன் சென்று பயிற்சிகளை மேற்கொண்டார் சிம்பு.

சிம்புவின் தம்பி திருமணம்

மீண்டும் லண்டன் செல்ல இருக்கிறார். இதற்கிடையே மாநாடு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த கருத்துக்களை நடிகர் சிம்பு முழுவதுமாக மறுத்துள்ளார். தற்போது திருமணம் செய்வது குறித்து யோசனை இல்லை என்றும். தனது முழு கவனமும் அவரது நடிப்பு மற்றும் தொழில் மீது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Here's What Is Tamil Actor Simbu Said on News of Getting Married

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.