Skip to main content

திரைப்படமாகிறது தாய்லாந்து தாம் லுவாங் குகை மீட்பு பணிகள் !!!

தாய்லாந்து

வடக்கு தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீட்கப்பட்டனர், இந்நிலையில் அந்த குகை தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.

அந்நாட்டை பொறுத்தவரை இந்த மீட்பு நடவடிக்கை ஒரு "பிரதான ஈர்ப்பு" என்று கூறி, மீட்பு நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதை காட்சிப்படுத்தும் காணொளி ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்த பட்சம் இரண்டு நிறுவனங்கள் இந்த மீட்புப் பணி குறித்து, ஒரு திரைப்படம் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கின்றன.

மீட்டெடுக்கப்பட்ட குழு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்கப்பட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியாக இருக்கும் காணொளி வெளியிடப்பட்டது, இருப்பினும் அவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை பெறவேண்டும்.
தாய் கடற்படை மீட்பு பணியின் வியத்தகு காட்சிகளையும் வெளியிட்டுள்ளன, மேலும், குகையில் சிக்கிய சிறுவர் கால்பந்து அணியை மீட்க இந்த ஆபத்தான பயணத்தை எவ்வாறு அவர்கள் மேற்கொண்டனர் என்பதை அந்த காணொளி காட்டுகின்றன.

ஹாலிவுட் திரைப்படம்?

இந்த மீட்பு நடவடிக்கையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அசாதாரணமான கதையை ஒரு திரைப்படமாக மாற்றும் வகையில், போட்டியிடுகின்றன.

குகையில் சிக்கிய அனைத்து 13 பேரும்  வெளியே மீட்கப்படுவதற்கு முன்பாகவே, பல உணர்ச்சிமயமான கிறிஸ்துவ படங்களை தயாரித்துள்ள, அமெரிக்க ஸ்டூடியோ பியூர் பிளிக்ஸ் நிறுவனம் - அதன் தயாரிப்பாளர்களை கொண்டு, இது குறித்த படம் எடுக்க மீட்பு பணி வீரர்களுடன் நேர்காணலில் ஈடுபட்டுள்ளது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.