Skip to main content

திரைக்காவியமாகும் அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" - ‍‍புதிய அப்டேட்!

 "பொன்னியின் செல்வன்"

அமரர் கல்கி (கிருஷ்ணமூர்த்தி) எழுதியுள்ள 5 தொகுதிகள் மற்றும் 2400 பக்கங்கள் கொண்ட "பொன்னியின் செல்வன்" நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

manirathnam on ponniyin selvan

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பழுவேட்டரையராக சத்யராஜ், பூங்குழலியாக நயன்தாரா, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்கள்.

படத்தை 2 பாகங்களாக உருவாக்க மணிரத்னம் திட்ட மிட்டு இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

nayanthara

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கதாபாத்திரங்கள் விவரம் வரும் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. 

புதிதாக ஆதியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆதியை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது? என்ற விவரம் இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.

Mani Ratnma's Ponniyin Selvan: Aadhi Pinisetty Shares That He Was Approached To Act! 

aadhi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.