Skip to main content

திமுக தலைவரை சந்தித்த‌ தெலுங்கானா முதல்வர்! 3 ஆம் அணி உருவாகிறதா?

மக்களவை தேர்தல்

3 ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கூறுவது என்ன?

மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். 

இதற்காக அவர் ஒவ்வொரு மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி விருகிறார்.

தெலுங்கானா முதல்வர்

கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவர் சந்தித்து பேசினார். ஸ்டாலினை சந்திக்க வந்தபோது அவர் தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால் சந்திக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு நேற்று (May 13) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது.

தெலுங்கானா முதல்வர்

அப்போது கூட்டாட்சி அமைக்க ஸ்டாலினிடம் சந்திர சேகர ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துச் சென்றுவிட்டார்.

​ stalin and chandrasekhara rao

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் கழகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Telangana CM K Chandrashekhar Rao Calls on DMK President MK Stalin 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.