Skip to main content

திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக குமரி பொதுக் கூட்டம் !

stalin and rahulgandhi

இந்திய நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் வருவார்; அவரது கையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழுரை செலுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மார்ச் 13 ஆம் தேதி தமிழகம் வந்தார். 

stalin

இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். 

வெகு விரைவில் ராகுல் காந்தியிடம் அதிகாரம் வரப்போகிறது. அது ஏழைகளுக்கான அதிகாரமாக இருக்கும். சாதாரண மக்களுக்கான அதிகாரமாக அது இருக்கும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதியில் போட்டியிடுகிறது. புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

DMK ALLIANCE
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.