Skip to main content

திமுக செயலாளர் இல்லத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு - ‍அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

fisheries minister jayakumar

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் . கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களுடைய கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை. மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அதிமுக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என கூறினார்.

petrolbomb blast

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு:

சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள திமுக செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவரது வீடு டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது.

இன்று காலை 6 மணியளவில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளையும், பாட்டில்களையும் வீசியதில் அது வெடித்து சிதறியது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பரமசிவத்தின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ADMK Fisheries minister Jayakumar codemns action of crude bomb attack on DMK worker's house

petrol bomb

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.