Skip to main content

தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்களால் நள்ளிரவிலும் கோயம்பேட்டில் அலைமோதும் கூட்டம்

கோயம்பேடு பேருந்து நிலையம்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏராளமானோர் திரண்டதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது.

வரும் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகளில், நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதியது. மக்கள் நள்ளிரவிலும் பேருந்துக்காக காத்திருந்தனர்.

எந்த பேருந்து எந்த நடைமேடையில் உள்ளது என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது .மேலும் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், முன்பதிவு செய்த பேருந்துகள் தாமதமாக வந்ததாக பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஏராளமானோர் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்கின்றனர். சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர் விடுமுறை என்பதால் தங்களது சொந்த ஊருக்கு, வெள்ளிக்கிழமை நவம்பர் 2 ஆம் தேதி இரவு முதலே பயணம் செய்கின்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

People crowded at Koyambedu busstand in the midnight due to travelling to their native for

Deepavali festival

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.