Skip to main content

டிசிஎஸ் பணியாளர் பாகுபாடு விவகாரம் - வழக்கை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

டிசிஎஸ் பணியாளர் பாகுபாடு விவகாரம் - வழக்கை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

டிசிஎஸ் நிறுவனம் இன உணர்வுடன் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறிய புகாரை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், உலகெங்கும் கிளைகள் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளிலும் டிசிஎஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் அலுவலங்களில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் சிலர் இந்த வழக்கை தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,

‘‘அமெரிக்காவில் டிசிஎஸ் அலுவலகங்களில் இன ரீதியான பாகுபாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். சம்பளம், சம்பள உயர்வு, போனஸ் தொகை என அனைத்திலும் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதேசமயம் பணிக்குறைப்பு, பணிநீக்கம் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைக்கு அதிகமாக அமெரிக்கர்கள் ஆளாகின்றனர். அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களில் 80 சதவீதம் பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் தான்.

20 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.  நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 12 சதவீதம் பேர்.

அதேசமயம் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 1 சதவீதம் மட்டுமே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் இயங்கி வரும் டிசிஎஸ், அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ‘‘டிசிஎஸ் நிறுவனம் இன ரீதியாகவும், அமெரிக்கர்களிடம் பாகுபாட்டுடனும் நடந்து கொள்வதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை மட்டும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை அணுக முடியாது. எனவே அவர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

California Court rejected the case against TCS that it had discriminated against non-South Asian workers in the US

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.