Skip to main content

டி20 உலககோப்பை தொடர் 2020 அட்டவணை!

 டி20 உலககோப்பை தொடர் 2020

டி20 உலககோப்பை தொடர் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள நிலையில், இதற்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. பெண்களுக்கான டி20 உலககோப்பை தொடர், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைப்பெற இருக்கிறது. ஆண்கள் டி20 உலககோப்பை தொடர், 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் நவம்பர் 15 வரை நடைப்பெற உள்ளது.

பெண்கள் டி20 உலககோப்பை தொடர்

இந்த தொடரில் 10 பெண்கள் அணி பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய ஏட்டு அணிகளும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

A பிரிவு

A பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தகுதி பெறும் அணி 1 ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

B பிரிவு

B பிரிவில், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் அணி 2 இடம் பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் அணி, தங்களது முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பெண்கள் டி20 கோப்பைக்கான அரையிறுதி போட்டி மார்ச் 5 ஆம் தேதியும், இறுதி போட்டி மார்ச் 8 ஆம் தேதி மெல்பர்ன் மைதானத்திலும் நடைப்பெற உள்ளது.

 டி20 உலககோப்பை தொடர் 2020

ஆண்கள் டி20 உலககோப்பை தொடர்

ஆண்கள் டி20 உலககோப்பை தொடர், அக்டோபர் 24, 2020 முதல் நவம்பர் 15 , 2020 வரை நடைப்பெற உள்ளது.

A பிரிவு

முதல் பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து மற்றும் இரண்டு தகுதி பெறும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

B பிரிவு

இரண்டாம் பிரிவில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு தகுதி பெறும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆண்கள் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டி நவம்பர் 11 மற்றும் 12 –ம் தேதி நடைப்பெறும். இறுதி போட்டி நவம்பர் 15 –ம் தேதி நடைப்பெறவுள்ளது.

MATCH

ICC T20 World Cup 2020: Fixtures revealed.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.