Skip to main content

டி20 போட்டிகளில் 4 முறை சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!!

டி20 போட்டிகளில் 4 முறை சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!!

லக்னோவில் நேற்று நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ரோஹித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களை விளாசினார்,இதன் மூலம் சில சாதனைகளையும் முறியடித்துள்ளார் ரோஹித்.

டி20 தொடர்களில் வேகமாக‌ அதிக ரன்கள் அடித்த வீரர்

இதுவரை டி20 தொடர்களில் அதிக ரன்களை எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா, கோலியின் 2101 ரன்களைக் கடந்து, தற்போது 2203 ரன்களில் உள்ள ரோஹித் சர்மா, மார்டின் கப்தில் (2271) சாதனைக்கு வெகு அருகில் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.

வேகமாக‌ அதிக ரன்கள் அடித்த இந்திய‌ வீரர்கள்

1.ரோஹித் சர்மா- 79 இன்னிங்ஸ்களில் 2203 ரன்கள்

2.விராட் கோலி- 58  இன்னிங்ஸ்களில் 2102 ரன்கள்

3.சுரேஷ் ரெய்னா- 66  இன்னிங்ஸ்களில் 1605 ரன்கள்

4.தோனி- 80 இன்னிங்ஸ்களில் 1487

5.யுவராஜ் சிங்- 51 இன்னிங்ஸ்களில் 1177.

டி20 தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர் 

மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 4 முறை சதங்களை அடித்து, சர்வதேச அளவில் நம்பர் 1 வீரராகவும் திகழ்கிறார் ரோஹித் சர்மா, இதுவரை டி20 போட்டிகளில் 3 முறை சதம் அடித்திருந்த நியூசிலாந்தின் கொலின் மன்ரோவின் சாதனையை முறியடித்தார் ரோஹித்.

மேலும் ஒரு விசித்திரத் தற்செயலாக ரோஹித் சர்மா அடித்த 4 டி20 சதங்களில் 3 இந்தியாவில் அடிக்கப்பட்டது, மூன்றுமே புதிய மைதானத்தில் அடிக்கப்பட்ட சதங்களாகும், தரம்சலா, இந்தூர், தற்போது லக்னோ மைதானங்கள்.

இதில் கிறிஸ் கெய்ல் மொத்தம் 21 சதங்களை அடித்துள்ளார். மெக்கல்லம், லூக் ரைட்,  மைக்கேல் கிளிங்கர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

2018-ல் மட்டும் 69 சிக்சர்களை விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. ஒரு காலண்டர் வருடத்தில் இவ்வளவு சிக்சர்களை யாரும் அடித்ததில்லை. கடந்த ஆண்டு 65 சிக்சர்களை அடித்திருந்தார் ரோஹித் சர்மா.

டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் கூட்டணி 1268 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரையில் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் கூட்டணி டி20 போட்டியில் அதிகபட்ச ரன்கள் சேர்த்துள்ள கூட்டணி ஆகும், அவர்கள் இணைந்து 1154 ரன்கள் சேர்த்துள்ளனர்.

Rohit Sharma becomes first player to hit 4 T20 international centuries,

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.