Skip to main content

டெஸ்ட் நட்சத்திரம் பும்ராவிற்கு ஓய்வு அளித்துள்ள பிசிசிஐ!

டெஸ்ட் நட்சத்திரம் பும்ராவிற்கு ஓய்வு அளித்துள்ள பிசிசிஐ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . மேலும் அவர் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பும்ரா. மெல்பர்னில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா அசத்தியது குறிப்பிட்டதக்கது.

Test series star Bumrah rested from Australia ODIs, NZ tour

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.