Skip to main content

தேர்தல் விதிமீறல் பதிவுகளை உடனடியாக நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புதல் !

social media

தேர்தல் விதிமீறல் பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகள் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரவாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் பிரதிநிதிகளுடன் வரும் மக்களவைத் தேர்தலில் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா விடுத்துள்ளார்.

election commission

சுனில் அரோராவின் கோரிக்கையை ஏற்ற சமூக வலைதள நிறுவன பிரதிநிதிகள், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதி மீறல் பதிவுகள் மற்றும் கமென்ட்களை, எவ்வளவு விரைவாக நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குவதாகவும், தொடர்ந்து அரசியல் மற்றும் தேர்தல் பதிவுகளை பதிவிடுவோர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.

அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கவுள்ள மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக மே 19 ஆம் தேதி வரை  நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Ahead of elections, social media firms to come up with ethics code

election commission

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.