Skip to main content

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை: பல இடங்களில் சிக்கிய பணம்

election flying squad

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மும்முரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று மேலும் 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

குடிசையில் 68,50,000 ரூபாய்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எட்டயபுரம் அருகே கருப்பூர் பகுதியில் உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 50) என்பவர் பனை தோட்டத்தில் உள்ள குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டி மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.68 லட்சத்து 50 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த பணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டது.

election flyng squad

தோட்டத்தில் 7,50,000 ரூபாய்

இதேபோல் கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பீக்கிலிப்பட்டி பகுதியில் கலைமணி என்பவரின் தோட்டத்தில் மரத்தின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.7½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்தி குளம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் உதவி தாசில்தார் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

சிக்கிய திமுக பொதுக் குழு உறுப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் மத்திமான்விளை என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு காரை மடக்கி சோதனையிட்ட போது, அதில் ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்தது.

அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து, கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த வசீகரன் (56) என்றும், தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் என்றும் தெரியவந்தது.

flying squad

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் என்ற இடத்தில் ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினத்தில் 36-வது வார்டு அதிமுக செயலாளர் சிங்காரவேலு என்பவரிடம் இருந்து 59 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தெரியவந்ததாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Election Flying Squad seizes money at various places in Tamilnadu
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.