Skip to main content

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி சான்றிதழ்கள்!

தேர்தல் பணி

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3,27,903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களில் 47,610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.

postal vote

தேர்தல் பணி சான்றிதழ்கள்

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

அவர்களும் வாக்குப்பதிவு நாளன்று சொந்த தொகுதிக்குள் வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும்.

அந்த வகையில் மொத்தம் 2,38,051 தேர்தல் பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணி

சர்வீஸ் ஓட்டுகள் - நஷ்டஈடு

ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் 67 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு சர்வீஸ் ஓட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.

தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும்.

தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும்.

தேர்தல் பணி

இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும். காவல்துறை ஓட்டுகள் (விண்ணப்பித்தவர்கள்) 24,971 உள்ளன.

அவர்களில் 10,657 பேர் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றுள்ளனர்.

Election Duty certificate will be issued for the Volunteers working on Election day

தேர்தல் பணி

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.