Skip to main content

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக வெற்றிபெற வாய்ப்பு!

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதியை தவிர்த்து 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி

வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டிவியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் திமுக கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

stalin

டைம்ஸ் நவ்:

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் திமுக கூட்டணிக்கு 29 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும், இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அதிமுக கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.

என்டிடிவி:

என்டிடிவி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங் களும், அதிமுக கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு:

சி.என்.என். நியூஸ்-18

சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்து உள்ளது.

Tamilnadu Exit Poll 2019: Dmk Led Alliance Predicted to Win.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.