Skip to main content

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் பூமத்திய அச்சின் அருகே ஒரு புயல் சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கத்தால், டிசம்பர் 6 ஆம் தேதியன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகளுமே, சென்னைக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. ஆனால் மிதமான மழை மட்டுமே எதிர்பார்க்க முடியும். வானம் மேகமூட்டமாக இருக்கும். சென்னையின் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 31 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி காலை 8 .30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 8 செ மீ மழையும், தாமரைப்பாக்கத்தில் 5 செ மீ மழையும் பதிவாகியுள்ளது.

Meteorological Dept  said a new low pressure area is likely to form over southwest Bay of Bengal by

December 9, which brings more rain to southern districts.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.