Skip to main content

டெங்குவை ஒழிக்க இயற்கை மருத்துவம் !!!

டெங்குவை ஒழிக்க இயற்கை மருத்துவம் !!!

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் இந்த நோய் பரவுகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த காய்ச்சல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவதும் இல்லை. 

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இல்லாமல் கூட உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

டெங்கு கொசு கடித்து 5 இல் இருந்து 7 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் அந்த நபருக்கு இருக்காது. மனித உடலில் பல்கிப் பெருகும், அதன் பிறகே அறிகுறிகள் தென்படும்.

டெங்குவை ஒழிக்க இயற்கை மருத்துவம் !!!

பின்வரும் ஐந்து விதமான இலைகளை சேர்த்து நீரில் கொதிக்கவைத்து பருகி வந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.

2. புதினா கீரை கைப்பிடி அளவு.

3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.

4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.

5. வாழைத்தண்டு 100 கிராம். 

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம்.

NATURAL MEDICINE TO CURE DENGUE FEVER

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.