Skip to main content

டெல்லி உயர்நீதிமன்றத்தில் எல்ஐசி நிறுவனத்திற்கு எதிராக ஐடிபிஐ வங்கி எதிர்மனு

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறுவனம் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதற்கு எதிராக அனைத்திந்திய ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

அடுத்தகட்ட விசாரணை நடை பெறும்வரை ஐடிபிஐ வங்கியில் பங்குகள் வாங்குவது தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் எல்ஐசி ஈடுபடக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் கூட்டமைப்பின் மனுவுக்கு விளக்கம் அளிக்கக்கோரி எல்ஐசி நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறுவனம் பங்குகளை வாங்கும் விவகாரத்தில் முதலீட்டு ஒழுங்குமுறைகள் ஏன் தளர்த்தப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

 

எல்ஐசி

 

இன்சூரன்ஸ் சட்டப்படி, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றொரு நிறுவனத்தில் 15 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வாங்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஐடிபிஐ வங்கியில் 51 சதவீத பங்குகளை எல்ஐசி கைப்பற்றுவதற்கு ஒருமுறை மட்டும் விதிமுறை தளர்வு அனுமதிக்கப்பட்டது.

இந்தக் கைப்பற்றல் மூலம் பொதுத் துறை வங்கி மற்றும் அரசு நிறுவனம் என்ற அங்கீகாரத்தை ஐடிபிஐ இழக்கும், இது 51 சதவீதத்துக்கு குறைவாக அரசின் பங்குகள் இருக்காது என்ற நாடாளுமன்ற உத்தரவாதத்துக்கு எதிரானது என ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் ஐடிபிஐ வங்கியின் 85.96 சதவீதப் பங்குகள் அரசிடம் உள்ளது. எல்ஐசி 7.98 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

முன்னுரிமை பங்குகள் அடிப்படையில் ஐடிபிஐ பங்குகளை எல்ஐசி கைப்பற்றுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஐடிபிஐ இயக்குநர் குழு கூட்டம் வரும் ஆகஸ்ட்-31 அன்று நடைபெறும் என ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.

IDBI bank passes negative plea against LIC in Delhi High Court

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.