Skip to main content

தேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலை பெற்ற கட்சிகளில் திமுக!

dmk

இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

தேர்தல் முடிவுகளின் காலை நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. குறிப்பாக 3 நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சிகள் நல்ல முன்னணியில் உள்ளன.

stalin

அகில இந்திய அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

முன்னிலை பெற்ற தொகுதிகளை பொறுத்தளவில் அகில இந்திய அளவில் திமுக 5-வது இடத்தில் உள்ளது. 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

தேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள கட்சிகள்

1. பாஜக
2. காங்கிரஸ்
3. திரிணாமூல் காங்கிரஸ் (மேற்கு வங்கம்)
4. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ஆந்திர பிரதேசம்)
5. திமுக (தமிழகம்) 

In National Level DMK Party lies in 5 th place with highest number of Leading Seats.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.