Skip to main content

டாடா மோட்டார்ஸ்: ஆகஸ்ட் மாத விற்பனை 32 சதவீதம் சரிவு!!!

tata motors

ஆகஸ்ட் மாதத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட அனைத்து வாகனங்களும் உலக விற்பனையில் 32 சதவீத சரிவை கண்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,07,030 யூனிட்களை விற்றது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 72,464 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், வணிக வாகனங்கள் மற்றும் டாடா டேவூ வரம்பின் உலகளாவிய மொத்த விற்பனை அலகுகள் கடந்த மாதம் 25,366 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 45,719 யூனிட்டுகளில் இருந்து 45 சதவீதம் குறைந்துள்ளது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

jaguar land rover

 

நிறுவனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களின் உலகளாவிய விற்பனை 47,098 ஆக உள்ளது, இது கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் 61,328 யூனிட்டுகளிலிருந்து 22 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.எல்.ஆரின் உலகளாவிய விற்பனை 39,615 ஆக உள்ளது.
ஜாகுவார் மொத்த விற்பனை அலகுகள் 10,097 வாகனங்கள், லேண்ட் ரோவர் மொத்த விற்பனை 29,518 யூனிட்டுகள். ஆகஸ்ட் 2018 இல் மொத்தம் 42,658 யூனிட்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tata Motors global sales dip 32 per cent in August

Tamil