Skip to main content

தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனியின் தண்டனை!

தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அணியின் மீட்டிங் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு வீரர்கள் தாமதமாக வந்தால் அவர் தரும் தண்டனை குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.

பல வெற்றி தருணங்களில் வீரர்களை திறம்பட வழி நடத்தியுள்ள தோனி. அவர் இந்திய அணிக்கு கேப்டன் ஆன போது ஒரு வலிமையான அடித்தளத்தை நிறுவினார் என அணியின் மனநல பயிற்சியாளர் பாடி ஆப்டன் கூறியுள்ளார்.

பாடி ஆப்டன் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிவித்தார். தோனி வீரர்களை கையாண்ட முறை குறித்தும் அவர் கூறினார்.

தோனி

டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் கவனமாக இருந்தனர்.

பயிற்சிக்கான நேர கணக்கை அணி தலைவரே தீர்மானிக்கலாம் என நிர்வாகம் முடிவெடுத்தது. கும்ப்ளே இதற்காக ஒரு வழியை கண்டறிந்தார். தாமதமாக பயிற்சிக்கு வரும் வீரர் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றார். 

தோனி

தோனி ஒரு படி மேலே சென்று,  ஒரு வீரர் தாமதமாக பயிற்சிக்கு வந்தால் அணியில் உள்ள அனைவரும் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றார்.

தோனியின் உண்மையான பலம் என்பது அவரது அமைதியான குணம், சூழலுக்கு ஏற்ப செயல்படுவது ஆகும்.

இது தான் அவரை வலிமையான தலைவராக வைத்துள்ளது. 

Dhoni's Unique Punishment to Tackle Latecomers in Training Revealed

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.