Skip to main content

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா உயர்ந்து 71.59 ஆக அதிகரிப்பு!!

இந்திய ரூபாய்

இன்று டிசம்பர் 13 , அமெரிக்க டாலருக்கு இந்திய நிகரான ரூபாயின் மதிப்பு 42 பைசா உயர்ந்து 71.59 ஆக அதிகரித்துள்ளது.

அந்நியச் செலாவணி சந்தைகள் உள்நாட்டு பங்குகளை அதிக அளவில் விற்பதால் அமெரிக்க டாலர் சில நாணயங்களுக்கு எதிராக பலவீனமடைந்தன.

அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71.70 ஆக இருந்து, பின்னர் 42 பைசா உயர்ந்து 71.59 ஆக அதிகரித்தது.

டிசம்பர் 12 ஆம் தேதி ரூபாயின் மதிப்பு 16 பைசாவாக குறைந்து 72.01 டாலராக இருந்தது.

குறிப்பிடத்தக்க வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை தான் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 12 ஆம் தேதி, வெளிநாட்டு முதலீடுகள் மூலதனச் சந்தையில் இருந்து 1,299.43 கோடி ருபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றது. உள்நாட்டில் முதலீட்டாளர்கள் 1,121.29 கோடி ருபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளவில், கச்சா எண்ணெய்யின் விலை 0.68% உயர்ந்து, 60.56 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்திய பங்குச் சந்தைகள் வணிகம் ஏற்றத்துடன் தொடங்கி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிகநேரத் தொடக்கத்தில் 206.27 புள்ளிகள் உயர்ந்து 35,985.34 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. நிஃப்டி 61.30 புள்ளிகள் உயர்ந்து 10,798.90 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றதை அடுத்துப் பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து பராமரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Rupee rises 42 paise to 71.59 per US dollar in early trade on December 13.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.