Skip to main content

தாக்க காத்திருக்கும் "வாயு புயல்": மூன்று லட்சம் பேர் வெளியேற்றம்!

புயல் வாயு

அரபிக் கடலில் உருவான "வாயு புயல்" நாளை ஜூன் 13 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே கரையை கடக்கும் என்பதால், குஜராத் மக்களை வாயு புயல் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கான ஆலோசனையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் நிவாரண முகாம்கள் அமைக்கவும், உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர புயல் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

cyclone vayu in arabian sea

3 லட்சம் பேர் இடமாற்றம்:

அதன்படி குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய குஜராத் அரசு இன்று காலை அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. 

இந்த 3 லட்சம் பேரும் சுமார் ஆயிரம் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு மற்றும் குடி தண்ணீர், மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவுக்குள் 3 லட்சம் பேரையும் வெளியேற்ற போர்கால அடிப்படையில் குஜராத்தில் பணிகள் நடந்து வருகின்றன. 

ndrf

ஒடிசா அரசிடம் குஜராத் மாநில அரசு ஆலோசனை

மக்களை இடமாற்றம் செய்வதற்காக ஒடிசா அரசிடம் குஜராத் மாநில அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

நாளை குஜராத்தை புயல் தாக்கும் போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 45 படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் 34 படை பிரிவினரும் குஜராத்திற்கு வந்துள்ளனர்.

புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில் கேரளா, கோவா, மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலம் காந்திநகரிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

Cyclone Vayu Updates: Gujarat, Diu to evacuate 3 lakh people, Mumbai to get very heavy rainfall

national disaster response force

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.