Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை மூடலும், தூய்மையான காற்றும்

ஸ்டெர்லைட் ஆலை

கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றியுள்ள சுற்றுப்புற காற்றின் தரம் தற்போது தூய்மையாக இருப்பதாக வேதாந்தாவின் மனுவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாய குழு பரிசோதித்து அறிக்கையளித்தது.

பிஎம்10 எனப்படும் நுண்ணிய பொருள் அளவுகள் கன மீட்டருக்கு 56 மைக்ரோகிராமில் இருந்து 64 மைக்ரோகிராம் அதிகரித்துள்ளது. நுண்ணிய பொருள் அளவுகள் அதிகரிப்பானது ஜிப்சம், கசடு மற்றும் பாதுகாப்பான நிலப்பரப்பில் இருந்து தூக்கியெறியப்பட்ட தூசி காரணமாகவும் இருக்கலாம்

மூத்த ஆலோசகர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள நச்சுப்பொருட்களின் அளவு கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியின் படி, கன மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் இருந்ததாகவும், இது தற்போது 5 மைக்ரோகிராம் அளவிற்கும் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னரும் கூட சுற்றுப்புற காற்றின் தரத்தில் அதிகரிப்பு ஏற்படவில்லை என்பது வேதாந்தா நிறுவனத்தின் விவாதமாக இருந்தது. இருப்பினும், மேலே உள்ள அளவுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள நச்சுப்பொருட்களின் அளவு மிகச் சுருக்கமாக குறைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Clean air among the environmental surroudings after closing of the Sterlite Corporation
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.