Skip to main content

ஸ்டாலின் தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

ஸ்டாலின்

இன்று பிப்ரவரி 2 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டின் பிரதான கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து அளிப்பது வழக்கம்.

திமுகவுக்கான தேர்தல் அறிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு சிறப்பாக இருந்தது. இதற்கான குழு பல்துறை நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயாரித்தது தான் இந்த சிறப்பிற்கு காரணம்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் மும்முரத்தில் திமுக உள்ளது. அதற்கான கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

கூட்டத்தில் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி - மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா,  டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ahead of General Election 2019: DMK party plans for election statement headed by DMK president MK Stalin.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.