Skip to main content

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் "இந்தியன் 2 " இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!!!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் "இந்தியன் 2 " இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!!!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் "இந்தியன்". வசூலைக் குவித்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு இயக்குநர் சங்கர் தற்போது இயக்குகிறார்.

ஜோடியாக காஜல் அகர்வால் 

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று ஜனவரி 18 ஆம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

கமல் பேரனாக நடிக்கும் சித்தார்த் 

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களும் உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு கமல்ஹாசனின் பேரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எதிர்பாராத சில காரணத்தால் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த் மீண்டும் 16 வருடங்கள் கழித்து சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shankar's "Indian 2" Shooting begins from January 18.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.