Skip to main content

ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை - பியூஷ் கோயல்!

piyush goyal

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், தனியார் மூலம் இயக்கப்படும் பயணிகள் ரயில் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

புதுடெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

indian railway

இதுதொடர்பான துணைக் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது, இதற்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு தெரிவித்தார்.

No proposal to privatise Railways, says Piyush Goyal

indian railway
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.