Skip to main content

ரயில்வே ஊழல் வழக்கு: லாலு பிரசாத் காணொளி விவாதம் மூலம் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே ஊழல் வழக்கு: லாலு பிரசாத் காணொளி விவாதம் மூலம் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி காணொளி விவாதம் மூலம் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக, நீதிமன்றத்தின முன் நேரடியாக ஆஜராக முடியாது என்று கூறப்பட்டபின் சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

அவர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் இருந்து காணொளி விசாரணையில் பங்கேற்கிறாரா, என்பதை உறுதிப்படுத்தும்படி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், லாலு பிரசாத்தின் மனைவி ரபரி தேவி, மகன் தேஜாஸ்வி யாதவ் மற்றும் மற்றவர்கள் ஜாமீன் மனுவை அமலாக்கத்துறை எதிர்த்தது. 

இரண்டு IRCTC ஹோட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தத்தை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக இந்த வழக்கு தொடங்கப்பட்டது, இதில் லாலு முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

IRCTC scam case: Delhi court asks Lalu Prasad to appear before it on Dec. 20 through video conference

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.