Skip to main content

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை !!!

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை !!!

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகிவிட்டனர். 

மக்கள் சொந்த ஊருக்கு போக வசதியாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

3 ஆண்டு சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம்!!!

இந்நிலையில் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் கால அவகாசம் கோரி தமிழக அரசு முறையிட்டுள்ள மனு இன்று அக்டோபர் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

அதே சமயம் நாடுமுழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதால், தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

3 Years prison and 1000 rupee fine for carrying crackers in train.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.