Skip to main content

ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய மூன்று படங்களும் திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவை. சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷை இயக்க உள்ளார். 
 

கார்த்திக் சுப்பராஜ் இன்னமும் "பேட்ட" படத்தின் வெற்றியை அனுபவித்து வருகிறார், அப்படத்தில் ரஜினியின் பழைய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழைய தோற்றத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார்".

அடுத்ததாக தனுஷ் முக்கிய காதாபாத்திரத்தில் தோன்றும் புதிய படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ், உண்மையில், இந்த புதிய படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, ஆனால் இயக்குனர் சுப்பராஜ் "பேட்ட" படத்தை இயக்குவதில் பிஸியாக இருந்ததால் தற்காலிகமாக இப்படம் நிறுத்தப்பட்டது.

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கினால் கேங்க்ஸ்டர் ஜானரில் படம் இயக்குவேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள கார்த்திக் சுப்புராஜிடம், விஜய்யை வைத்து படம் இயக்கினால் என்ன ஜானரில் எடுப்பீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் மாஸ் கேங்க்ஸ்டர் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என்று கூறிய அவர் கமல்ஹாசனுக்கு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் பதிலை சமூகவலைதளங்களில் வீடியோவாக பார்த்த அஜித் ரசிகர்கள், விஜய்க்கு கேங்க்ஸ்டர் கதை அஜித்துக்கு மட்டும் காமெடி படமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

After Rajinikanth's 'Petta', Karthik Subbaraj to direct Dhanush next

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.