Skip to main content

ரஜினிகாந்த் 167 "தர்பார்" ஃபர்ஸ்ட் லுக்!

ரஜினிகாந்த் 167 "தர்பார்' ஃபர்ஸ்ட் லுக்!

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்திற்கு 'தர்பார்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக்கையும் பட தயாரிப்புக்குழு தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "பேட்ட" திரைப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது, எனினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. 

இந்நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளது படக்குழு. 

nayanthara and rajini kanth

அதன்படி, ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இந்த புதிய படத்திற்கு "தர்பார்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதும் போஸ்டர் மூலம் தெரிய வருகிறது.

'ரஜினியின் தர்பார் ஆரம்பம்' என கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இணையத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

​  darbar

இந்த படத்திற்கான படப்பிடிப்பு நாளை (April 10) மும்பையில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.

Rajinikanth's Thalaivar 167 title revealed: Darbar is the name of AR Murugadoss' film [First Look Poster]

nayanthara

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.