Skip to main content

ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

ரஹ்மான்-வில் ஸ்மித்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உலக அளவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை வென்றதன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில், ரஹ்மான் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான வில் ஸ்மித்தைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், இசையிலும் அதிக ஆர்வம் உடையவர் என்பதால், சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும், ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை வருகை குறித்து ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.