Skip to main content

ரசிகர்களுக்கு ரன்வீர் வெளியிட்ட பிறந்தநாள் பரிசு!

#83

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்க்கை வரலாற்று படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் தோன்றும் ரன்வீர் சிங் தனது கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 83 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடும் ரன்வீர், தனது பிறந்தநாளை முன்னிட்டு 83 படத்தில் தனது தோற்றத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

kapil dev

ரன்வீர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் உள்ளார், ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோனே இருவரும் இந்த படத்தில் நடித்துவருகின்றனர்.

படத்திலும் இவர்கள் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். கபில் தேவ்வின் மனைவி ரோமி பாட்டியா வேடத்தில் நடிக்கிறார் தீபிகா. 

ranveer as kapil dev

1983 ஐசிசி உலகக் கோப்பையில், இந்திய அணியை வெற்றி பெற பெருந்துணையாக இருந்த, ஹரியானாவைச் சேர்ந்த கபில் தேவ் என்ற சிறுவனின் பயணத்தை இந்த 83 திரைப்படம் பிரதிபலிக்கும்.

1983 ஆம் ஆண்டில் இந்தியா கோப்பையை வென்றதால் இப்படத்திற்கு 83 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ranveer

 

முன்னதாக, கபில் தேவின் காலணிகளில் காலடி எடுத்து வைப்பதற்காக, ரன்வீர் '83 அணியுடன் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டார். 

இங்கிலாந்து செல்வதற்கு முன்பு, ரன்வீர் கபில் தேவ் உடன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் 10 நாட்கள் வரை தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கபில் தேவின் தனிப்பட்ட மற்றும் விளையாட்டு வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டார் ரன்வீர்.

கபீர் கான் இயக்கிய 83, 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வரலாற்று வெற்றியை பற்றியது, மேற்கிந்திய தீவுகள் அணியை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் பல்விந்தர் சிங் சந்து படத்திற்கு ரன்வீர் மற்றும் பிற குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.

படம் ஏப்ரல் 10, 2020 அன்று வெளியாக உள்ளது.

kapil

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.