Skip to main content

ராணுவ வீரர்களின் பெயர்களை உடம்பில் டாட்டூ குத்திய ராஜஸ்தான் இளைஞர்!

pulwama terror attack

சமீபத்தில் ஜம்முவின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், உலகம் முழுவதிலுமிருந்து வரும் கண்டனங்களுக்கு மத்தியில், ராஜஸ்தான் பிகானர் பகுதியை சேர்ந்த இளைஞர் கோபால் ஸஹ்ரான் என்பவர் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒரு தனிப்பட்ட முறையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் உள்ள பகத் சிங் இளைஞர் படைப்பிரிவின் உறுப்பினராக இருந்த இளைஞர் கோபால் ஸஹ்ரான், பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் உயிர்த்தியாகம் செய்த 71 பாதுக்காப்பு படை வீரர்களின் பெயர்களைத் தனது உடம்பில் டாட்டூ குத்தியுள்ளார்.

வீரர்களின் ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதையும் இந்த டாட்டூ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் பல்வேறு தாக்குதல்களில் உயிரிழந்த 31 பாதுகாப்பு படை வீரர்களின் பெயர்களையும் அவர் டாட்டூ குத்தியுள்ளார்.

pulwama attack

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு வழிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறோம். அவர்களது பெயர்கள் நமது மனதில் எப்போதும் வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், எனவே தான் அவர்கள் பெயர்களை எனது உடம்பில் டாட்டூ குத்திக்கொள்ள நான் முடிவு செய்தேன்.

இதன் மூலம் நாட்டு மக்களிடையே இந்த வீரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன், "என அந்த இளைஞர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தற்கொலை கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Bikaner youth pays unique tribute to Pulwama martyrs, gets 71 names inked on his body

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.