Skip to main content

ராஜஸ்தான் மாநில பாட புத்தகத்தில் விரைவில் "அபிநந்தனின் பாகிஸ்தான் அனுபவம்"

abhinandan

பாகிஸ்தானின் விமானத்தை சுட்டுவீழ்த்தி பின்னர் எதிர்பாராத விதமாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், ராஜஸ்தான் மாநில பாட புத்தகத்தில் அவர் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய சேதம் இல்லை, மரங்கள் மீதே இந்தியா குண்டு வீசியுள்ளது என்று பாகிஸ்தான் கூறியது. எனினும், மசூத் அசார் நடத்தும் மதரசாக்கள் மீது குண்டு விழுந்துள்ளதாக அவரின் சகோதரர் பேசும் ஆடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படையின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, எதிர்தாக்குதலால் அபிநந்தன் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர்.

எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.

அபிநந்தனின் பாகிஸ்தான் அனுபவம் விரைவில் ராஜஸ்தான் மாநில பாட புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Rajasthan to include Wing Commander Ahinandan's Pakistan Episode in state board syllabus.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.