Skip to main content

ராஜபக்ச இந்தியா வருகை: இந்திய இலங்கை உறவு குறித்து கலந்துரையாடல்!

ராஜபக்ச

அரசுமுறைப் பயணமாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச இந்தியா வருகிறார்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றதற்குப் பிறகு முதல் முறையாக ராஜ பக்ச வரும் இந்தியப் பயணம் இதுவாகும்.

இதுகுறித்து ராஜபக்சவின் அலுவலகம்  தரப்பில், ''ராஜபக்ச இன்று பிப்ரவரி 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசுமுறைப் பயணமாக இந்தியா செல்கிறார். பெங்களூருவில் நடைபெறும் இலங்கை - இந்தியா நட்புறவு குறித்த நிகழ்ச்சியில் ராஜபக்ச உரையாற்றுவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் ராஜபக்சவின்  இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும். கடந்த 2018 செப்டம்பர் மாதம் இந்தியா  வந்த ராஜபக்ச, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அரசியல் குழப்பம்

இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தார். மேலும் அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

rajapaksha and sirisena

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்பு, பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது. அதன் பின் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச பிரதமராகச் செயல்பட தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா இதனை அறிவித்தார். அதிபர் சிறிசேனாவின் உத்தரவுப்படி இது நடைமுறைப் படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால் இதற்கு சம்பந்தன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் பதவி வழங்காமல் கட்சி மாறி வந்த அவருக்கு பதவி வழங்க்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Mahinda Rajapaksa to visit India to attend forum

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.