Skip to main content

ராஜீவ் காந்தியின் 28 வது நினைவுதினம் - நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி!

death anniversary of rajiv gandhi

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று மே 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21 ஆம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்க உள்ளது.

ராஜீவ் காந்தி

இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  

Nation pays homage to former PM Rajiv Gandhi on 28th death anniversary

death anniversary of rajiv gandhi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.