Skip to main content

பவானிசாகர் அணையை நோக்கி படையெடுக்கும் யானை கூட்டம்!

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் அப்பகுதியிலிருந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு யானைகள் கூட்டமாகச் சென்று தாகத்தைத் தணித்துக்கொள்கின்றன.

"ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவைக் கொண்டதாகும். புலிகள் காப்பக வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. 

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் பள்ளங்கள், தடுப்பணைகள், வனக் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதன் காரணமாக யானைகள் கூட்டம் தாகத்தைத் தணிப்பதற்காக பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்குச்சென்று தண்ணீர் குடிக்கின்றன.

இந்நிலையில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்பவர்கள் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டுமென வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Elephants visits Bhavani Sagar Dam for Water.

சத்தியமங்கலம்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.