Skip to main content

புயல் பாதித்த ஒடிஷாவிற்கு குவியும் உதவிகள்!

புயல் பாதித்த ஒடிஷாவிற்கு குவியும் உதவிகள்!

ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை மே 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்தது. பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,500-க்கும் அதிகமான பேருந்துகள் மக்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அவர்களுடன் தன்னார்வலர்களும் இரவு பகலாக பணியாற்றி, பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 5 ஆயிரம் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.

cyclone fani

ஃபானி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பல மாநிலங்களும் புயல் பாதித்த ஒடிஷாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. 

நிவாரண மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கு ஒடிசாவிற்கு உதவி வழங்கிய மாநிலங்கள்:

தமிழ்நாடு: ரூ 10 கோடி.

மகாராஷ்டிரா: ரூ 10 கோடி.

உத்தரப்பிரதேசம்: ரூ 10 கோடி

குஜராத்: ரூ 5 கோடி

சத்தீஸ்கர்: ரூ 11 கோடி

fani cyclone​    ​

புயலில் சேதமடைந்த வீடுகள் வீடமைப்பு திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் என ஒடிஷா முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

வேளாண் நிலங்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் கால்நடைகள், மீன் வளர்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட்டு, அதற்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Cyclone Fani: States offered contribution to Odisha for relief and rehabilitation efforts.

cyclone fani
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.