Skip to main content

புயல் பாதித்த ஒடிசாவிற்கு தெலுங்கானா உதவி!

புயல் பாதித்த ஒடிசாவிற்கு தெலுங்கானா உதவி!

ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை மே 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்தது. பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,500-க்கும் அதிகமான பேருந்துகள் மக்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அவர்களுடன் தன்னார்வலர்களும் இரவு பகலாக பணியாற்றி, பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

cyclone fani

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 5 ஆயிரம் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.

ஃபானி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

fani cyclone

பல மாநிலங்களும் புயல் பாதித்த ஒடிஷாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. 

தெலுங்கானா உதவிக்கரம்

புயல் காரணமாக ஒடிசாவில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது, சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒடிசாவில் தேவைப்படும் மின் பராமரிப்பு பணிகளுக்கு தெலுங்கானா அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. 

fani cyclone​    ​

இன்று தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000 மின் ஊழியர்கள் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர்.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறுசீரமைக்க ஒடிசா அரசாங்கம் தெலுங்கானா அரசிடம் உதவி கேட்டுள்ளது.

fani cyclone

இதை அறிந்த தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், ஒடிசாவிற்கு வேண்டிய உதவிகளை செய்ய பிரதம செயலாளர் எஸ்.கே. ஜோஷிக்கு தொலைபேசி மூலம் அறிவுறுத்தினார்.  

இதன் எதிரொலியாக இன்று தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000 மின் ஊழியர்கள் ஒடிசாவிற்கு சென்றுள்ளனர்.

Telangana govt extends support to cyclone Fani-hit Odisha

cyclone fani
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.