Skip to main content

புதுவையில் "மக்கள் நீதி மய்யம்"!

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சியை புதுவையில் இன்று ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு மக்களுடன் ஓராண்டு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில் புதுவையிலும் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட உள்ளது. இதன் பின்னர் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி கமல்ஹாசனின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. இதன்பின்னர் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசி வருகிறார்.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கமல் அறிவித்துள்ளார். கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கமல் தற்போது சங்கர் இயக்கத்தில் "இந்தியன் 2 " படத்தில் நடித்து வருகிறார், இப்படத்துடன் தனது சினிமா வாழக்கையை முடித்துவிட்டு அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

Actor cum Politician KamalHassan starts his Party in Puducherry.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.