Skip to main content

புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சோனாலி பிந்த்ரே!!!

புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சோனாலி பிந்த்ரே!!!

நியூயார்க்கில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாலி பிந்த்ரே, டிசம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் சிகிச்சை முடிந்து மும்பைக்குத் திரும்பினார், அவர் குணமடைந்து வருவதாக அவரது கணவர் கொல்ட்டி பெஹல் கூறினார்.

sonali with her husband

தற்போதைக்கு சோனாலிக்கு புற்று நோய் சிகிச்சை முடிவு பெற்றுள்ளதாகவும், இருப்பினும் அடிக்கடி மருத்துவ சோதனைக்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் எனவும் அவரது கணவர் கூறினார்.

சோனாலி நலமுடன் இருக்கிறார். அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார். இப்போது, ​​சிகிச்சை முடிந்துவிட்டது. ஆனால் இந்த நோய்க்கிருமி மீண்டும் வரலாம், அதனால் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதாக அவர் கூறினார். 

சிகிச்சைக்காக சோனாலி நியூயார்க்கில் இருந்தபோது, பிரியங்கா சோப்ரா மற்றும் சோஃபியா டர்னர் ஆகியோருடன் அவர் வெளியில் சென்ற புகைப்படங்களை சோனாலி வெளியிட்டுள்ளார். 

அவர் மூத்த நடிகர் ரிஷி கபூருடன் (மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க்கிலும் இருந்தார்) சந்தித்தார். சோனாலி பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sonali in priyanka marriage shower

தமிழ் திரையுலகில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்று நோய் இருப்பதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முற்றிய புற்றுநோய் அபாய கட்டத்தில் உள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் சோனாலி, தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த உயிர் போராட்டத்தை குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியோடு எதிர்கொள்ள முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஆக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களில் நடித்த இவர் 2004 ம் ஆண்டுக்கு பின்னர் படங்களில் நடிக்கவில்லை. 2002 ல் திரைப்பட இயக்குனர் கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 13 வயதில் ரன்வீர் என்ற ஒரு மகன் உள்ளார். 

Sonali Bendre Returns To Mumbai, after her cancer treatment.

sonali in newyork

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.