Skip to main content

புனிதமாக மாறிய அதிசய தினம்: புனித வெள்ளியின் சிறப்பு!

 புனித வெள்ளி

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

கடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.

 புனித வெள்ளி

தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தைகளைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத்தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர்களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

இயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.

இதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

 புனித வெள்ளி

உலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.

சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.

புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.

Good Friday being observed today

 புனித வெள்ளி

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.