Skip to main content

புல்வாமா தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் புதிய வழக்கு!

புல்வாமா தாக்குதல்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) (National Investigation Agency (NIA)) நேற்று பிப்ரவரி 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறையினர் அவந்திபோரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இது தொடர்பாக வழக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் மறுபதிவு செய்தது. விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரிக்கும். ஏற்கெனவே, தாக்குதல்நடந்த இடத்தில் இருந்து வெடிபொருட்களை தேசிய புலனாய்வு நிறுவனம் சேகரித்துள்ளது.

மேலும், காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடந்தது என்ன?

தெற்கு காஷ்மீர் மாநிலத்தின் அவந்திபோராவில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள சுமார் 2500 க்கும் மேற்பட்ட காவற்துறையினர் விடுமுறை முடிந்து, பணிக்கும் திரும்புவதற்காக 78 பேருந்துகளில் சென்றுகொண்டிருந்த போது, சுமார் 300 மற்றும் 350 கி.கி (660-770 லக்) வெடிகுண்டுகள் கொண்ட ஒரு கார் இந்த ரிசர்வ் படை வாகனத்தின் மீது மோதச்செய்து இந்த சம்பவத்தை தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு 

இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

புல்வாமாவிலுள்ள ககபோராவிலிருந்து அடில் அஹ்மத் என்ற பயங்கரவாதியை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ராணுவ மேஜர் உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப் படைத்தாக்குதலில் 42 மத்திய ரிசர்வ் படை ஜவான்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இந்திய தேசம் இன்னும் மீளாத நிலையில், இந்த தாக்குதல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு இளைஞனும் கொல்லப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

hilal and kamran

பலி தீர்த்தது இந்தியா 

காவல்துறையினர், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் இராணுவத்தின் கூட்டுக் குழு சார்பில் பிப்ரவரி 18 ஆம் தேதி இன்று அதிகாலையில் புல்வாமாவிலுள்ள பிங்கிலா கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் ரகசிய செய்தி கிடைத்ததன் பெயரில்,  ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய பாகிஸ்தானிய தீவிரவாதி உட்பட இரண்டு முதல் மூன்று ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், இந்த பகுதியில் மறைந்து இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தபோது, பாதுகாப்பு வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு எதிராக பாதுகாப்பு படைகளும் எதிர்த்து துப்பாக்கியில் சுட்டனர்.

சமீபத்திய தகவல்களின்படி, காயமடைந்த இராணுவ வீரர் ஸ்ரீநகரில் ஒரு இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பகுதி முழுவதும் ராணுவ பாதுகாப்பின் கீழ் வந்தது. தற்போது இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் காஜி, சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

NIA chief visits Pulwama attack site; fresh case filed by agency

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.