Skip to main content

புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர் தாக்குதல்!!!

புளோரிடா மாகாணத்தில்  மர்ம நபர் தாக்குதல்!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் யோகா கூடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
 

இதுகுறித்து செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”புளோரிடாவில் உள்ள யோகா மையத்தில்  மர்ம  நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டு நடத்தியவர் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் தெரியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த வெஸ்சன்  என்பவர் கூறும்போது, ”நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது சத்தமான ஒலி கேட்டது நாங்கள் அங்கிருந்து ஓடிச் சென்று விட்டோம்” என்றார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து புளோரிடா காவல்துறையினர், ”இது அதிர்ச்சிகரமான சம்பவம். துப்பாக்கிச் சூடு குறித்து  துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Gunman kills two, wounds five at yoga studio in Florida

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.