Skip to main content

பருப்பு வகைகள் மீதான இறக்குமதி தடைகள் மார்ச் வரை நீட்டிப்பு

பருப்பு வகைகள் மீதான இறக்குமதி தடைகள் மார்ச் வரை நீட்டிப்பு

விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கான விலையை உயர்த்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையில், பருப்பு வகைகள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மார்ச் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில், வர்த்தகர்கள் 1 லட்சம் டன் மஞ்சள் பட்டாணி, 2 லட்சம் டன் துவரம் பருப்பு மற்றும் 3 லட்சம் டன் உளுத்தம் பருப்பு மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை டிசம்பர்மாதத்திற்குள் இறக்குமதி செய்ய அனுமதித்தனர்.

தற்பொழுது துவரம் மற்றும் உளுத்தம் பருப்புகளின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிட குறைவாகவ இருப்பதால், பருப்பு இறக்குமதிகளை அரசு அனுமதிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

அந்நியச் செலாவணி இயக்குநரகம் வழங்கிய அறிவிப்புக்கு  கட்டுப்பாடுகள் சுமத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட போது, அரசாங்கம் இந்த கோரிக்கையை  ஏற்று கொள்ளாதபோதிலும், சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் இறுதி விசாரணையை நிறைவு செய்யும் வரை, வர்த்தகர்கள் பருப்பு இறக்குமதி செய்ய அனுமதித்தது.

பருப்பு வகைகள் தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) கீழே உள்ளன. மேலும், அரசாங்க முகவர் நிறுவனங்களுடன் 11 லட்சம் டன் பங்கு உள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளை விரிவாக்குவது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

வேளாண் அமைச்சகத்தின் கருத்துப்படி, கரீப் பருப்புகளின் உற்பத்தி, 9.22 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு 9.34 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டை விட துவரம் பருப்பின் உற்பத்தி 40-50% குறைவாக இருக்கும் எனவும், உளுத்தம் பருப்பின் உற்பத்தி 25% குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Import curbs on pulses may continue till March 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.