Skip to main content

பப்ஜி விளையாட்டு மோகம்: மும்பை இளைஞர் தற்கொலை!

பப்ஜி விளையாட்டு

மும்பையை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பப்ஜி விளையாட புதிய மொபைல் ஒன்றை வாங்க தனது குடும்பத்தினருடன் வாக்கு வாதம் ஏற்பட்டதில் மனமுடைந்து அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள குர்லாவின் நேரு நகர் பகுதியில் வசிக்கும் அந்த இளைஞன் இந்த கோர முடிவை எடுத்துள்ளார். பப்ஜி விளையாட 37,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை வாங்கித்தர கேட்டுள்ளார்.

எனினும், இளைஞர் குடும்பம் அவரது கோரிக்கைக்கு கவனம் செலுத்த மறுத்து, அந்த பையனுக்கு செல்போன் வழங்கவில்லை.

மனமுடைந்த அந்த இளைஞன் ஒரு கயிறு எடுத்து, அவரது வீட்டு சமையலறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds')

பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds') எனப்படும் விளையாட்டு, இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவின் இணையதள மன்னன் 'டென்சென்ட்' பப்ஜி கேமை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியுள்ளது. இந்த கேமை 20 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் உலகம் முழுவதும் 3 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் பப்ஜி கேம் வன்முறையையும், கோபத்தையும் தூண்டுவதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹத் நிசாம் வழக்கு தொடர்ந்துள்ளான். பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவன் வலியுறுத்தியுள்ளான்.

இதுதொடர்பாக சிறுவன் தொடர்ந்திருக்கும் மனுவில், ‘' ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அற நெறிகளை (Ethics) மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும். வன்முறை, வெறுப்புணர்வு, கோபத்தை தூண்டும் பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை இளைஞன் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

PUBG 'Addiction' Sees Mumbai Youth Commit Suicide When Denied New Smartphone

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.