Skip to main content

பப்ஜி விளையாட்டிற்கு குவியும் எதிர்ப்பு !

பப்ஜி விளையாட்டிற்கு குவியும் எதிர்ப்பு

பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்க கோவா மாநில சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என அதன் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை எதிர்த்து வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில், இம்முறை கோவாவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே பரோவோரிமில் நடைபெற்ற ஒரு அரசாங்க நிகழ்வில், பப்ஜி விளையாட்டை கட்டுப்படுத்த கோவா மாநிலத்தில் ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்றார்.

இந்த விளையாட்டு ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் ஒரு அரக்கன் போல் மாறிவிட்டது, மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருவதால், அவர்களது படிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் மும்பையை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பப்ஜி விளையாட புதிய மொபைல் ஒன்றை வாங்க தனது குடும்பத்தினருடன் வாக்கு வாதம் ஏற்பட்டதில் மனமுடைந்து அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds')

பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds') எனப்படும் விளையாட்டு, இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவின் இணையதள மன்னன் 'டென்சென்ட்' பப்ஜி கேமை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியுள்ளது. இந்த கேமை 20 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் உலகம் முழுவதும் 3 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் பப்ஜி கேம் வன்முறையையும், கோபத்தையும் தூண்டுவதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹத் நிசாம் வழக்கு தொடர்ந்துள்ளான். பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவன் வலியுறுத்தியுள்ளான்.

இதுதொடர்பாக சிறுவன் தொடர்ந்திருக்கும் மனுவில், ‘' ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அற நெறிகளை (Ethics) மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும். வன்முறை, வெறுப்புணர்வு, கோபத்தை தூண்டும் பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Ban on PUBG: Goa State IT Minister Wants the ‘Demonic’ Game to be Restricted

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.