Skip to main content

பகல்- இரவு டெஸ்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து- ஆக்லாந்தில் நாளை தொடக்கம்.

image

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.

ஆக்லாந்து:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது.

நியூசிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதே நேரத்தில் அந்த அணி ஏற்கனவே பகல்-இரவு டெஸ்டில் ஆடி இருக்கிறது. அறிமுக பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் (அடிலெய்ட், 2015) 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
 

Tamil