Skip to main content

பிரதமர் நரேந்திர மோடியின் "பரிட்சைக்கு பயமேன் 2.0"!!!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி புதுடெல்லி தல்கதோரா மைதானத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு குறித்து கலந்துரையாடினார்.

முதல் முறையாக இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரஷ்யா, நைஜீரியா, ஈரான், நேபாளம், தோஹா, குவைத், சவூதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,"உலகெங்கிலும் உள்ள பெற்றோரும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

தொழில்நுட்பம், மாணவர்களுக்கு ஒரு கெட்ட விஷயம் என்று நான் சொல்ல மாட்டேன். தொழில்நுட்பம் மனதை விரிவுபடுத்த வழிவகுக்கும் மற்றும் புதுமை ஏற்பட ஒரு வழிமுறையாகும்.

தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தங்கள் சொந்த அபிலாஷைகளை நுழைக்கும் போது  பெற்றோர்கள் தோல்வி அடைகிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும்.  

narendra modi

தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்; தொழில்நுட்பம் பற்றி விவாதிக்க வேண்டும், ஆனால் தொழில்நுட்பத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்" என கூறினார்.

மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன்  அவர் நிகழ்த்திய கலந்துரையாடல்  நிகழ்ச்சி  தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. மற்ற தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

2,000 மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சித்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளுக்கான ஒரு குறுபடம் காட்டப்பட்டது, அந்த குறும்படத்தில் தேர்வு சம்பந்தப்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதற்கு கடந்த வருடம் "பாரிக்காசா பர் சர்ச்சாவிடம் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிறப்பித்துக் காட்டுகிறது.

24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு ஆன்லைன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு ஆன்லைன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்வை போலல்லாமல், https://www.mygov.in/ என்ற இணையத்தில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் வெற்றிபெற்ற பங்கேற்பாளர்கள் மட்டுமே இந்த ஆண்டு பிரதமருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.

PM Narendra Modi to interact with students in Pariksha Pe Charcha 2.0

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.